- Advertisement -
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்திருப்பார். முதல் படத்திலேயே புகழை பெற்றார் நடிகை லட்சுமி மேனன். அடுத்தடுத்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சுந்தர பாண்டியன், மஞ்சப்பை, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் தமிழில் நடிக்க வில்லை. திரைப்படத்தில் ஆர்வம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தி படப்படிப்புகளை நிறைவு செய்தார். தொடர்ந்து நடனத்திலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து அண்மையில் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


