மீண்டும் தாமரை மலர வேண்டும்… பாஜகவுக்கு கீர்த்தி சுரேஷின் அம்மா ஆதரவு…
- Advertisement -

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இதைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர முன்னணி கதாபாத்திரத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அவரது தந்தை சுரேஷ்குமார் கேரளாவில் சிறந்த நடிகராகவும் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக சிறந்து விளங்கியவர். நடிகர் திலீப்குமார் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் சுரேஷ்குமாரும் ஒருவர். நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜக இணைக்கப்பட்டு கேரள மாநிலக் குழுவிலும் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உயர்ந்த பதவியும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ், மீண்டும் தாமரை மலர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வாக்களித்த பின்னர் பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. மக்கள் தற்போது மாற்றத்தை எதிர்பார்ப்பதாக கூறினார். மேலும், கேரளாவில் பாஜக வெல்லும் எனவும் அவர் உறுதி அளித்தார்.