- Advertisement -
பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கோலிவுட்டில் வாமனன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை பிரியா ஆனந்த், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்தக் தொடங்கினார். புகைப்படம், நூற்றெண்பது, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
இறுதியாக தமிழில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் அவர் நடித்துள்ளார். இந்தியிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்
తిరుమల శ్రీవారిని దర్శించుకున్న సినీ నటి #PriyaAnand pic.twitter.com/nA59l7tQhN
— Gulte (@GulteOfficial) June 30, 2024