நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருபவர். இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இந்த படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். அதைத் தொடர்ந்து மலைக்கோட்டை, ராவணன், சாருலதா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி. இந்நிலையில் நடிகை பிரியாமணி பாலியல் சீண்டல் குறித்து பேசியுள்ளார். அதாவது மலையாள சினிமாவில் சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று சமீப காலமாக வெளியாகும் தகவல்கள் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி ராதிகா, சிம்ரன் போன்ற நடிகைகள் பாலியல் வன்கொடுமை குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியாமணியிடம் பாலியல் வன்கொடுமை குறித்த கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், தன்னிடம் யாரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதில்லை எனவும் அதுபோன்ற கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் மலையாள திரைத்துறையை போல மற்று மொழிகளிலும் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
- Advertisement -