Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் புதிய பாடல் குறித்து அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் புதிய பாடல் குறித்து அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி நடிக்கும் ஹிட்லர் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் புதிய பாடல் குறித்து அறிவிப்பு!

நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனி, வள்ளி மயில் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஹிட்லர். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வானம், படைவீரன் போன்ற படங்களை இயக்கிய தனா இயக்கியிருக்கிறார். செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க விவேக்- மெர்வின் ஆகியோர் இசையமைக்கும் பணிகளை கவனித்துள்ளனர். விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் புதிய பாடல் குறித்து அறிவிப்பு!மேலும் நவீன் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியான நிலையில் அடுத்ததாக அடியாத்தி எனும் புதிய பாடல் நாளை (செப்டம்பர் 7) வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ