நடிகை ரேவதி வெப் தொடர் ஒன்றை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகை ரேவதி 80 மற்றும் 90 காலகட்டங்களில் பல்வேறு ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக திகழந்தவர். அந்த வகையில் இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர், கமல்ஹாசன், ரஜினி, முரளி, கார்த்தி, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதற்கிடையில் நடிகை ரேவதி , இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் கஜோல் மற்றும் விஷால் ஜத்வா நடிப்பில் சலாம் வெங்கி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனராக என்ட்ரி கொடுக்க உள்ளார் ரேவதி. அதன்படி தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக புதிய வெப் தொடர் ஒன்றை இயக்க இருப்பதாக நடிகை ரேவதி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த வெப் தொடர் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.