spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுழுநேர புகைப்பட கலைஞராக மாறிய ஷங்கர் பட நடிகை

முழுநேர புகைப்பட கலைஞராக மாறிய ஷங்கர் பட நடிகை

-

- Advertisement -
ஒரு கால கட்டத்தில் கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சதா. அதுமட்டுமன்றி இந்திய அளவில் பல மொழிகளில் நடித்த பிரபலமான நடிகையும் ஆவார். அவர் தமிழில் ஜெயம்ரவியுடன் இணைந்து நடித்த ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அந்நியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றியை பெறவே சதாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. அடுத்தடுத்து அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின
அஜித், மாதவன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து சதா நடித்திருந்தார். ஒரு இடைவௌிக்கு பிறகு வினய்க்கு ஜோடியாக உன்னாலே உன்னாலே படத்தில் நடித்தார். இத்திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகிய சதா, டார்ச்லைட்’ உள்ளிட்ட சில படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக சினிமா பக்கம் தலைகாட்டாத சதா போட்டோகிராபியில் இறங்கினார். இதற்கிடையில் மும்பையில் ‘எர்த்லிங்ஸ் கஃபே’ என்ற ஹோட்டலையும் நடத்தி வந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். மேலும், கையில் கேமராவை எடுத்துக் கொண்டு முழு நேர புகைப்பட கலைஞராக மாறி இருக்கிறார். காடுகளுக்கு சென்று சிங்கம், புலி, யானை, மற்றும் பறவைகளின் புகைப்படங்களை எடுப்பதில் நடிகை சதா ஆர்வம் காட்டி வருகிறார். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ