- Advertisement -
பிரபல நடிகை சமந்தா, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான அவர், மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் உச்சம் தொட்ட அதே நேரத்தில் தெலுங்கிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

தமிழில் விஜய், சூர்யா, விஷால், அதர்வா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவண் கல்யாண் என டாப் நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.




