ரஜினி மற்றும் கமல் குறித்து நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.
ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் லெஜெண்ட்டுகளாக கருதப்படுகின்றனர். இருவருமே தனித்துவமான கலைப்பயணத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். ரஜினி, ஸ்டைல் மற்றும் மாஸ் ஆகியவற்றில் கலக்குவது போல பல்வேறு வேடங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்துபவர் கமல். இருவரும் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. ரசிகர்கள் பலரும் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் போட்டியாளர்களாக பார்க்கின்றனர். ஆனால் இருவருமே தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்கள். விரைவில் இருவரும் இணைந்து படம் நடிக்கப் போகிறார்கள். ஏற்கனவே பல படங்களில் இருவரும் இணைந்து நடித்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட போது நடிகை சுஹாசினி மேடையில் கமல் மற்றும் ரஜினி குறித்து பேசி உள்ளார்.
#Suhasini Recent
– #KamalHaasan and #Rajinikanth are like brothers.
– If #Kamal has any accident on the set, #Rajini sir immediately calls and asks about it.#ThugLife #Cooliepic.twitter.com/af1Npj0vxE— Movie Tamil (@_MovieTamil) September 8, 2025

அதன்படி அவர், “கமல்ஹாசன் மற்றும் ரஜினி ஆகிய இருவருமே சகோதரர்கள் மாதிரி. ஆடியன்ஸ் நீங்க தான் அவர்கள் இருவருக்கும் போட்டி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக ரஜினி, எனக்கு கால் பண்ணி கமலுக்கு வலிக்குதா? என அக்கறையாக விசாரிப்பார். அந்த அளவிற்கு இருவரும் நெருங்கியவர்கள்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.