கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார்.
உலக நாயகனாக கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன். கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி உள்படபல மொழிப் படங்களிலும் கமல்ஹாசன் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் கமல் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி, கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் உள்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கும் நிலையில், இதில் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்றது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறதாம்.