spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகூவத்தூர் விவகாரத்தில் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா!

கூவத்தூர் விவகாரத்தில் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா!

-

- Advertisement -

நடிகை திரிஷா, தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் திரிஷா நடிப்பில் லியோ மற்றும் தி ரோட் போன்ற திரைப்படங்கள் வெளியானது. அதை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கூவத்தூர் விவகாரத்தில் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா! இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகை திரிஷாவை கூவத்தூர் விவகாரத்தில் தொடர்புபடுத்தி அதிமுக முன்னால் நிர்வாகி ஏ.வி. ராஜு அவதூறாக பேட்டி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. இது தொடர்பாக ஏவி ராஜுவிற்கு கண்டனம் தெரிவி த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி பதிலடி கொடுத்தார் திரிஷா. அதேசமயம் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். கூவத்தூர் விவகாரத்தில் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா!இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகரும் இயக்குனருமான சேரன், சமுத்திரக்கனி, நாசர் உள்ளிட்ட பலர் திரைத்துறையில் உள்ள சக நடிகையை அவதூறாக பேசியதற்காக கண்டனம் தெரிவித்து திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். இதற்காக சேரன், நாசர், சமுத்திரகனி ஆகியோருக்கு நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான், விஷால், கஸ்தூரி போன்றோரும் திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ