Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

‘குட் பேட் அக்லி’ படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

-

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.'குட் பேட் அக்லி' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

தமிழ் சினிமாவில் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகியுள்ளது. அஜித்தின் 63 வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் ஏற்படும் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. 'குட் பேட் அக்லி' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரனிடம், குட் பேட் அக்லி படத்தில் எந்தெந்த இடங்களில் மாஸ் இருக்கும் என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ” குட் பேட் அக்லி படத்தில் மாஸ் இருக்கும். அதேசமயம் எமோஷனலும் இருக்கும். எல்லா காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ