spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' டைட்டிலை தேர்வு செய்தது அவர்தான்.... மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்!

‘குட் பேட் அக்லி’ டைட்டிலை தேர்வு செய்தது அவர்தான்…. மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க அபிநந்தன் ராமானுஜன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.'குட் பேட் அக்லி' டைட்டிலை தேர்வு செய்தது அவர்தான்.... மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்! ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போது தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் அதற்கு பதிலாக ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் இப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இப்படமானது வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. எனவே ரசிகர்களும் இப்படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போடும் வகையில் குட் பேட் அக்லி படத்திலிருந்து டீசரும், OG சம்பவம் பாடலும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றை இந்த படத்தின் தலைப்பை யார் தேர்வு செய்தது என்பது குறித்து பேசி உள்ளார்.'குட் பேட் அக்லி' டைட்டிலை தேர்வு செய்தது அவர்தான்.... மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்! அதன்படி அவர் பேசியதாவது, “குட் பேட் அக்லி படத்தின் டைட்டிலை அஜித் சார் தான் தேர்வு செய்தார். இந்த படத்தில் ரெட் டிராகன் என்ற அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பயங்கர மாஸாக இருக்கும். அதே சமயம் இந்த படத்தில் எமோஷனல் கனெக்டும் இருக்கும். ஏப்ரலில் அஜித் ரசிகர்களுக்கு விருந்துதான். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் அஜித் சார் வரும்போது எப்படி இருக்கும் என்று எங்கள் குழுவினருடன் இணைந்து பேச பேச அடுத்தடுத்த விஷுவல் வந்து கொண்டே இருக்கும். அதை தான் நாங்கள் திரையில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

MUST READ