தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருப்பவர் இசை அமைப்பாளர் அனிருத். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சூப்பர் ஹிட் ஆகும் பெரும்பாலான பாடல்களில் அனிருத்தின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.
வேலையில்லா பட்டதாரி , கத்தி, நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர்கள் விருதை பெற்றுள்ளார். அதே சமயம் சிறந்த பாடகாருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அனிருத், தற்போது பல மொழிப் படங்களிலும் கவனம் காட்டி வருகிறார். அண்மையில், அட்லீ இயக்கத்தி்ல வெளியான ஜவான் படத்திற்கும் அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார்.
After a sensational world tour last year, Anirudh will be back in USA with his 'Hukum' theme, captivating audiences worldwide 💥 #GoHukum #EpicNight #HukumZone
@anirudhofficial @ShriBalajiLive
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 22, 2024