அகிலன் படத்தின் முன்னோட்டம் வெளியானது
ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் அகிலன். இந்த படத்தில், பிரியா பவானிசங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகிலன் படத்தின் முதல் தோற்றம் மற்றும் படம் உருவான விதம் குறித்த வீடியோ வெளியானது.
இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் கூறப்பட்டது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், அகிலன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், அகிலன் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் முன்னோட்டம் வைரலாகி வருகிறது.