துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் அஜித் இணைய உள்ளார்.
இன்னும், இப்படத்திற்கு பெயர் சூட்டபடவில்லை. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை NETFLIX நிறுவனம் வாங்கி உள்ளது. அஜித், விக்னேஷ் சிவன் இணையும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு வெளியான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்தும் ஐஸ்வர்யாராயும் இணைந்து நடித்துள்ளனர்.
ஆனால், அஜித்துக்கு ஜோடியாக அப்படத்தில் நடிகை தபூ தான் நடித்திருந்தார். அஜித்தின் வலிமை, துணிவு ஆகிய படங்களுக்கு அவருக்கு ஜோடியே கிடையாது.
அதுபோலவே இப்படத்திலும் அவருக்கு ஜோடி இருக்காது என்றும் ஹீரோயின் கேரக்டரில் மட்டும் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானமும் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது.
சந்தானம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடிக்க இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
ஆனால், இதற்குப் பின்னால் சில காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் தற்போது போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கி இருப்பது அனைவருக்கும் தெரியும். சொல்லப்போனால் இந்த விஷயம் மிகவும் ஆச்சரியமாக கூட பேசப்பட்டது.
அதாவது சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் அவர் சில கடன் நெருக்கடிக்கும் ஆளானார். அப்படி இருக்கும்போது அவர் போயஸ் கார்டனில் வீடு வாங்கி இருப்பது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்.