Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்…. ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

-

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 , வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டு எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தினார்.ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு! அதுமட்டுமில்லாமல் லால் சலாம் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 21 இல் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் தேர் திருவிழா என்னும் முதல் பாடலை நாளை மாலை 5 மணி அளவில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

லால் சலாம் படத்தினை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ