Homeசெய்திகள்சினிமாஅஜித் -ஆதிக்கின் குட்பேட் அக்லி... கதை என்ன தெரியுமா..?

அஜித் -ஆதிக்கின் குட்பேட் அக்லி… கதை என்ன தெரியுமா..?

-

- Advertisement -

ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட்பேட்அக்லி’, ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ். நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பபை பெற்றுள்ளது. டிரைலரை பார்த்தவர்கள் வழக்கம்போல் ஆளாளுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். குட்பேட்அக்லி கதை குறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தால் ‘‘திரிஷா இல்லன்னா நயன்தாரா, அ.அ.அ, பாஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியவர் ஆதிக். அவரின் அனைத்து படங்களும் பக்கா கமர்ஷியல் படங்கள். அஜித் இணைந்து இருப்பதால், இந்த படத்தில் இன்னும் கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் இருக்கிறது.

மரண மாஸான தல தரிசனம்.... இணையத்தை அதிர வைக்கும் 'குட் பேட் அக்லி' ட்ரெய்லர்!

குறிப்பாக, படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள். அஜித் தவிர, அர்ஜூன்தாஸ், பிரபு, பிரசன்னா, ஜாக்கிஷெராப், தெலுங்கு சுனில் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஹீரோக்களாக நடித்தவர்கள் அல்லது நடித்து வருபவர்கள். ஹீரோயினாக திரிஷா நடித்து இருக்கிறார். அவரை தவிர சிம்ரனும் இருக்கிறார். ஒரு பாடலுக்கு யார் ஆடியிருக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

ஃபேன் பாயின் அடுத்த சம்பவம் ரெடி.... 'குட் பேட் அக்லி' படத்தின் வெறித்தனமான அப்டேட்!

படத்தின் கதை என்பது, வில்லன் கும்பலிடம் இருந்து மகனை எப்படி மீட்கிறார் அஜித் என்ற லைனில் செல்கிறது. டிரைலரில் அதற்கான விஷயங்கள் தெரிகிறது. விடாமுயற்சி படத்தில் வில்லன் கும்பலிடம் இருந்து மனைவியை மீட்ட அஜித், இதில் மகனை மீட்கிறார். அதை தன் பாணியில் வித்தியாசமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். மகனாக கார்த்திகேய தேவ் நடித்து இருக்கிறார். இவர் சலார், எம்புரான் படங்களில் சின்ன வயது ஹீரோவாக நடித்தவர். படத்தில் அப்பா, மகன் பாசம் வலுவாக இருக்கிறது. அப்பா, மகள் படத்தில் வந்த விஸ்வாசம் பெரிதாக ஹிட்டான நிலையில், இதில் மகன் பாசத்தை மையமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர்.

'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த 'டாக்டர்' பட வில்லன்!

இன்னும் ரிலீசுக்கு ஒரு வாரமே இருக்கிற நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனால், குட்பேட் அக்லியை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் ரசிகர்கள். மார்க் ஆண்டனி என்ற வெற்றி படத்துக்குபின் ஆதிக் இயக்குவதால், அவரும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஏப்ரல் 10ம் தேதி, அடுத்த சில வாரங்களில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்த மாதம்தான் பல படங்கள் வருகின்றன. அதனால், போட்டியில்லாமல் வருகிறது குட்பேட்அக்லி.

MUST READ