Homeசெய்திகள்சினிமாஒரே இடத்தில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம்.... வைரலாகும் புகைப்படங்கள்!

ஒரே இடத்தில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம்…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம் ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ஒரே இடத்தில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம்.... வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கிடையில் அஜித், கார் பந்தயங்களில் கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். அதே சமயம் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர விநாயக் சந்திரசேகரன், சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.ஒரே இடத்தில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம்.... வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினியடனும், சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடனும் நேற்று (ஏப்ரல் 25) சென்னை, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த CSK vs SRH ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வந்துள்ளனர். அப்போது அஜித் – ஷாலினியுடன், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயனும், ஆர்த்தியும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ஒரே இடத்தில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம்.... வைரலாகும் புகைப்படங்கள்!இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இது தவிர சிவகார்த்திகேயன், அஜித்தின் அருகில் அமர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக பேசி, சிரித்து போட்டியை காணும் புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.

MUST READ