spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா11 வகையான சிறுதானியத்தில் அஜீத், விஜய் உருவம்

11 வகையான சிறுதானியத்தில் அஜீத், விஜய் உருவம்

-

- Advertisement -

11 வகையான சிறுதானியத்தில் நடிகர் அஜீத், விஜய் உருவம் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கில் சமையல் தொழிலாளர்கள் படைப்பு.

சென்னை வண்ணாரப்பேட்டையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் பாரத் திரையரங்கில் சிறு தானியத்தில் செய்யப்பட்ட அஜித் மற்றும் விஜயின்  உருவத்தை ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

we-r-hiring

வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கில்  நடிகர் அஜீத் நடிக்கும் துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு படம்  வெளியாகுவதை முன்னிட்டு அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சங்கம் இணைந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பாரத் திரையரங்குகளில் ”கம்பு, தினை, சோளம், குதிரை வாலி, கேழ்வரகு, சாமை, வரகு”, உள்ளிட்ட 11 வகையான சிறுதானியங்களை வைத்து 5 அடி அகலம்,  6 அடி உயரத்தில்  நடிகர் அஜீத்  மற்றும் விஜய் உருவம் வடிவமைத்து காட்சி படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவன் சுமார் 10 மணி நேரமாக ஒன்றிணைந்து 11 வகையான சிறுதானியங்கள் மூலம் நடிகர் அஜீத் மற்றும் விஜய் உருவம் வரையப்பட்டுள்ளது.

தல, தளபதியின் உருவம் ஒரே இடத்தில் சிறுதானியத்தில் அமைக்கப்பட்டிருப்பது காண்போரை வியக்க வைத்தது நம்மாழ்வாரின் நினைவாக சிறுதானிய உணவுகளை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரசிகர்களை கொண்டாடும் வகையிலும் தல, தளபதி உருவம் வரையப்பட்டுள்ளது. அதை, காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

MUST READ