spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதலக்கணம் இல்லாத 'தல'.... அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்!

தலக்கணம் இல்லாத ‘தல’…. அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்!

-

- Advertisement -

நடிகர் அஜித் அடுத்த ரேஸுக்கு தயாராகிவிட்டார்.தலக்கணம் இல்லாத 'தல'.... அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்!

தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் உருவாகி இருந்தால் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. தலக்கணம் இல்லாத 'தல'.... அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்!அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் ஃபேன் பாய் என்பதை நிரூபித்திருக்கிறார். அந்த அளவிற்கு படம் முழுக்க அஜித் ரெஃபரன்ஸ், மாஸ், நாஸ்டால்ஜிக் மொமென்ட்ஸ், பழைய பாடல்கள் என பல சர்ப்ரைஸ்களை வைத்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தார். அதன்படி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ரசிகர்களை படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். முதல் நாளில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தலையில் ஏற்றுக்கொள்ளாமல், அதை பற்றிய தலைக்கணம் ஏதும் இல்லாமல் அடுத்த கார் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ