spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்திய சினிமாவை பெருமைப்படுத்திய அஜித்.... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய அஜித்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் அஜித் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளார்.இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய அஜித்.... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் சிறுவயதிலிருந்தே கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதன்படி படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தனது நண்பர்களுடன் இணைந்து பைக், கார் ரைடு செல்வார். இந்நிலையில்தான் தன்னுடைய ‘குட் பேட் அக்லி’ படத்தை முடித்த அஜித், தொடர்ந்து கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி ஏற்கனவே துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடந்த கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். தற்போது இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடிகர் அஜித் புதிய முடிவை எடுத்துள்ளார். இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய அஜித்.... அப்படி என்ன செய்தார் தெரியுமா?அதாவது INDIAN CINEMA என்று குறிப்பிடப்பட்டுள்ள லோகோவை தன்னுடைய சீருடை, ரேஸ் கார் ஆகியவற்றில் பொறித்துள்ளார். மேலும் அந்த லோகோவில் WORLD’S LARGEST PRODUCER OF FILMS IN OVER 20 INDIAN LANGUAGES என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

we-r-hiring

அடுத்தது அஜித், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்து தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ