spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிடாமுயற்சி படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த அஜித்.... வைரலாகும் வீடியோ!

விடாமுயற்சி படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த அஜித்…. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

விடாமுயற்சி படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த அஜித்.... வைரலாகும் வீடியோ!நடிகர் அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக தனது 62 ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித். விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை தடம், தடையறத் தாக்க போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது அர்ஜுன், ரெஜினா போன்ற சக நடிகர்களை அஜித் எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகி வந்தது. அதுமட்டுமில்லாமல் அருகில் உள்ள ரசிகர்களை அஜித்தே போட்டோ எடுத்து ஃப்ரேம் செய்து அவர்களுக்கு பரிசாக கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் சில ரசிகர்களும் அஜித்திற்கும் பரிசுகள் வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படபிடிப்பின் போது ரசிகர்கள் சிலர் அஜித்தை சந்திக்க வந்துள்ளனர். அவர்களிடம் மிகவும் தன்மையாக ‘ப்ளீஸ் உட்காருங்கள்’ என கூறி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் அஜித். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ