நடிகர் அஜித், தன்னுடைய அடுத்த படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. அஜித்தின் சினிமா கேரியரிலேயே அதிக வசூலை அள்ளிய சாதனையை குட் பேட் அக்லி திரைப்படம் படைத்தது. மேலும் குட் பேட் அக்லி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்று ஹிண்ட் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அதே கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 திரைப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், 2025 அக்டோபர் மாதம் வரை சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகரும், ரேஸருமான அஜித், “என் புதிய படத்தை 2025 நவம்பரில் தொடங்க இருக்கிறேன். அது 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும்” என்று அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.

மேலும் அஜித்தின் அடுத்த படமானது, குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறதா? அல்லது தனி ஒரு படமாக உருவாக இருக்கிறதா? என்பது போன்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.