தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் அஜித் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல் கார் பந்தயத்திலும் ஆர்வமுடையவர். அந்த வகையில் அடுத்தடுத்த கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார்.
அஜித்துக்கு கிடைத்த இந்த விருது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேசமயம் விருது வாங்கிய பின் சென்னை திரும்பிய அஜித்துக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி, “அஜித் ஜனாதிபதி மாளிகையில் விருது பெற்றதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விருது பெற்றது பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “என் குடும்பம் தான் என்னுடைய மிகப்பெரிய பலம்.
என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். என்னுடைய கஷ்டகாலத்தில் எனக்கு ஒரு தூணாக இருந்திருக்கிறார். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் சாதிக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கான பாராட்டுகள் எல்லாம் என் மனைவிக்கு தான் சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -