spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' ..... டீசர் ரிலீஸ் எப்போது?

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ ….. டீசர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் இறுதியாக ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' ..... டீசர் ரிலீஸ் எப்போது?இந்த படத்தை தொடர்ந்து மீகாமன், தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியான நிலையில் அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அஜர்பைஜான், ஐதராபாத் போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில் எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' ..... டீசர் ரிலீஸ் எப்போது? இந்நிலையில்தான் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித அப்டேட்டும் வெளிவரவில்லை. தற்போது டீசர் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி விடாமுயற்சி படத்தின் டீசர் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ