spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகே.ஜி.எஃப் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்......செம மாஸான அப்டேட்!

கே.ஜி.எஃப் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்……செம மாஸான அப்டேட்!

-

- Advertisement -

கே.ஜி.எஃப் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்......செம மாஸான அப்டேட்!யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 1 திரைப்படம் இந்திய அளவில் பிரபலமடைந்து ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் இமாலய வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கினார். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியான இந்த இரண்டு படங்களுமே தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பிரசாந்த் நீல், பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் நடிகர் அஜித், பிரசாந்த் நீலுடன் பணியாற்ற விரும்பியதாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.கே.ஜி.எஃப் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்......செம மாஸான அப்டேட்!

இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

நடிகர் அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ