Homeசெய்திகள்சினிமாஅஜித்துக்கு ஜோடியாகும் ஹீமா குரேஷி.... மீண்டும் இணையும் 'வலிமை' பட கூட்டணி!

அஜித்துக்கு ஜோடியாகும் ஹீமா குரேஷி…. மீண்டும் இணையும் ‘வலிமை’ பட கூட்டணி!

-

வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித் தனது 62 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தடம், தடையற தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இது குறித்து அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியாகியிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை தாமதம் ஆகி கொண்டு இருக்கிறது. ஆனாலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அதன்படி, இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ்  இதில் வில்லன்களாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் கதாநாயகியாக திரிஷா மற்றும் தமன்னா நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

ஆனால் தற்போது அஜித்துடன் வலிமை திரைப்படத்தில் இணைந்திருந்த பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சுபாஷ்கரன் சமீபத்தில் விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ