ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் அஜித் பட நடிகை தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தர பாண்டியன், வேதாளம், குட்டிப்புலி, சந்திரமுகி 2, சப்தம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். அடுத்தது இவர் ஆரியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்நிலையில் இவர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள பாருக்கு சென்றிருந்த நிலையில் அங்கு மற்றொரு தரப்பினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் அது தகராறாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் லட்சுமி மேனன் தரப்பினர், எதிர் தரப்பினரை சேர்ந்த ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவரை காரில் கடத்திச் சென்று தாக்கிவிட்டு இடையில் அவரை இறக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அலியார் ஷா சலீம் எர்ணாகுளம் காவல் துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார். லட்சுமி மேனனும் அவருடைய நண்பர்களும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கினார்கள் என்று தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் லட்சுமி மேனனையும், அவருடைய நண்பர்களான மிதுன், அனீஸ் ஆகியோர்களையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர். அதில் மிதுன், அனீஸ் ஆகிய இருவரும் மாட்டிக்கொண்ட நிலையில் லட்சுமி மேனன் மட்டும் தலைமுறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் லட்சுமி மேனனை தீவிரமாக தேடி வருகிறார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.