நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் விடாமுயற்சி திரைப்படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அதன்படி இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் 10ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் நடந்த பேட்டியில் குட் பேட் அக்லி படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
அவர் கூறியதாவது, “20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஜூலையில் 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். அதன் பின்னர் படப்பிடிப்பிற்காக படக்குழு தென் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் துணை நடிகர்கள் முடிவு செய்யப்படுவார்கள். அஜித்தின் தனி ஆக்சன் காட்சிகள் தான் படமாக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு பாடல் இருக்கு இசையமைத்து முடித்துள்ளார். அந்தப் பாடலின் படப்பிடிப்பு கல்யாண் மாஸ்டருடன் முடிந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் சமீபத்தில் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.