அஜித்தின் சூப்பர் ஹிட் படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து தனது 64வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் பல இயக்குனர்களிடம் கதை கேட்டும் வருகிறார் அஜித். இந்த நிலையில் தான் அஜித்தின் அமர்க்களம் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது என அப்டேட் கிடைத்துள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித், ஷாலினி, நாசர், ரகுவரன், ராதிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘அமர்க்களம்’. அஜித்தின் 25 ஆவது படமான இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் இந்த படம் 26 வருடங்கள் கழித்து விரைவில் ரீ ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த டீசரில் இந்த படம் 2026 பிப்ரவரி 12ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடிகை ஷாலினியின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 20) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.


