நடிகை அலியா பட் புகைப்படம் – நடிகர் ரன்பீர் கபூர் ஆவேசம்
தனது மனைவி அலியா பட்டை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளேன் என்று நடிகர் ரன்பீர் கபூர் ஆவேசமாக கூறினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் பாலிவுட் நடிகை அலியா பட், அவரது வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த போது வேறொரு கட்டிடத்தில் இருந்து சிலர் அவரை புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதற்கு அலியா பட் தரப்பில், தனது தனியுரிமை மீறப்படுவதாக கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவரது கருத்துக்கு இந்தி திரையுலகில் பல பிரபலங்கள் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் தனியார் சேனலுக்கு அலியா பட்டின் கணவரும் நடிகருமான ரன்பீர் கபூர் அளித்த பேட்டியில், ‘அலியா பட்டை படம் எடுத்தது, அவரின் தனியுரிமை மீதான அத்துமீறல் செயலாகும். எங்களது வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை எப்படி நீங்கள் (புகைப்படக்காரர்கள்) படம் எடுக்கலாம். அன்று நடந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை; இதுபோன்ற செயல்கள் மிகவும் அசிங்கமாக உள்ளது’ என்றார்.