Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... புதிய முயற்சியை கையில் எடுத்த அட்லீ!

அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்…. புதிய முயற்சியை கையில் எடுத்த அட்லீ!

-

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... புதிய முயற்சியை கையில் எடுத்த அட்லீ!இவருடைய நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் சுமார் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இவர், பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 22 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இது தொடர்பான ப்ரோமாவை பார்க்கும் போது இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில், ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... புதிய முயற்சியை கையில் எடுத்த அட்லீ!எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப் போவதாகவும், சமந்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது எனவும் இப்படம் 2027ஆம் ஆண்டின் நடுவில் அல்லது இறுதியில் திரைக்கு வரும் என லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இதுவரை அட்லீ எடுத்த படங்கள் எதுவும் இரண்டு பாகங்களாக வெளியாகவில்லை.அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... புதிய முயற்சியை கையில் எடுத்த அட்லீ! ஆகையினால் இந்த படத்தின் மூலம் புதிய முயற்சியினை கையில் எடுத்திருக்கிறார் அட்லீ. எனவே இவர் வெறித்தனமான, பயங்கரமான சம்பவத்திற்கு தயாராகி வருகிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகிறது.

MUST READ