தமிழ் சினிமாவில் ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அதைத்தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்தை இயக்கினார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் பிரபலமாகி மாபெரும் வெற்றியை பெற்றது. எனவே இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி இவர், தனுஷை இயக்கப் போவதாகவும், தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது D55 படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.
Dir #RajkumarPeriasamy Recent Interview
– Pre-production work is underway on the film #D55 and we will start shooting in four or five months.
– Expect an update on this film in July.
– This will be a film that looks after the overlooked.#Dhanush #D56
pic.twitter.com/yWMf2eRwaS— Movie Tamil (@MovieTamil4) April 7, 2025
அதன்படி அவர் கூறியதாவது, “D55 படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கி விடுவோம். அதன்படி ஜூலை மாதத்தில் இந்த படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த படமானது நம்ம இயல்பான வாழ்க்கையில் இந்த மாதிரியான ஆட்கள் இருப்பார்களா என்பதை உணரவே மாட்டோம். நம்ம இயல்பு வாழ்க்கை இயல்பாக இயங்குவதற்கு இவர்களும் முக்கிய காரணம். அப்படிப்பட்ட மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே இருப்பார்கள். அதாவது கவனிக்கப்படாத மனிதர்களை கவனிக்கும் ஒரு படம்” என்று தெரிவித்துள்ளார்.