spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅமீர் இயக்கும் 'இறைவன் மிகப் பெரியவன்'... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

அமீர் இயக்கும் 'இறைவன் மிகப் பெரியவன்'... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களுடைய கவனம் பெற்றவர் இயக்குனர் அமீர். இவர் சமீப காலமாக இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் யோகி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மாயவலை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இறைவன் மிகப் பெரியவன் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் அமீர். இந்த படத்திற்கு வெற்றி மாறனும் தங்கமும் இணைந்து கதை எழுதியுள்ளனர். இதில் விஜய் டிவி புகழ் அஷார், கரு பழனியப்பன், மைதீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.அமீர் இயக்கும் இறைவன் மிகப் பெரியவன்... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

we-r-hiring

தற்போது இறைவன் மிகப் பெரியவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் இப்படம் 2024 இல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பட குழுவினர் அறிவித்து படப்பிடிப்பை தொடங்கினர். சிறிய இடைவெளிக்கு பிறகு அமீர் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இறைவன் மிகப் பெரியவன் என்ற தலைப்பில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களையும் குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ