Homeசெய்திகள்சினிமாஅமீர் நடிப்பில் உருவாகியுள்ள 'உயிர் தமிழுக்கு'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள உயிர் தமிழுக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் அமீர், உயிர் தமிழுக்கு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை ஆதம் பாவா இயக்கியுள்ளார். இதில் அமீருடன் இணைந்து சாந்தினி, இமான் அண்ணாச்சி, ஸ்ரீதரன், சுப்பிரமணிய சிவா, மாரிமுத்து, ராஜ்கபூர், சரவண சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். தேவராஜின் ஒளிப்பதிவிலும் வித்தியாசாகரின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அரசியல் சார்ந்த கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் சமீபத்தில் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் பணம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அமீர் மாயவலை என்னும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ