spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅறுவை சிகிச்சை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்!

அறுவை சிகிச்சை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்!

-

- Advertisement -

இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அமிதாப் பச்சன். 81 வயதாகும் இவர் இன்றும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியப் படங்களின் வருகைக்கு பிறகு ஹிந்தி மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப் பச்சன்..... ரசிகர்களுக்கு நன்றி! குறிப்பாக தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் கல்கி 2898 AD. பிரபாஸ் ஹீரோவாகும் கமல்ஹாசன் வில்லனாகவும் நடிக்கும் இப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அமிதாப் பச்சன் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காலில் ரத்த கட்டி இருந்த காரணத்தால் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை நீக்கியதாகவும் சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அமிதாப் பச்சன், மும்பையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து போட்டியை காண வந்துள்ளார். இவரைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி இவரைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்த நிலையில் ரசிகர் ஒருவர் நலமா எப்படி இருக்கிறீர்கள் என்று அமிதாப் பச்சனிடம் கேட்டார். அதற்கு அமிதாப் பச்சன், ஆம் நலமாக இருக்கிறேன் அது வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அறுவை சிகிச்சை என பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமிதாப் பச்சன்.

MUST READ