எட்டு வருடத்திற்கு பிறகு ஒரே நாளில் நடிகர் அஜித் மற்றும் விஜய் நடித்து வெளியான படங்களை கொண்டாட திரையரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
சென்னை ரோகினி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் நடித்த துணிவு, வாரிசு என இரண்டு படங்களும் 8 வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகி உள்ளது.

நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் என அடுத்தடுத்து வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஆயிரக் கணக்கான அஜித், விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தனது நடிகர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரோகினி திரையரங்கில் ரசிகர்களின் இடிபாடுகளில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
மேலும், சில இடங்களில் அஜித் ரசிகர்கள் விஜயின் கட்டவுட்களை அடித்து உடைத்தனர். அதேபோல், பதிலுக்கு பதில் என்று அஜித்தின் கட்டவுட்களை அடித்து நொறுக்கினார்கள்.
இந்த கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீது ஏரி நடனமாடியபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.
திரைப்படங்களை கொண்டாடுவது, கட்டவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது மற்றும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.