அசோக் செல்வன் நடிக்கும் பொன் ஒன்று கண்டேன் படமானது நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து அசோக் செல்வன், சரத்குமாருடன் இணைந்து போர் தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் அசோக் செல்வன் நடிப்பில் சபாநாயகன், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அசோக் செல்வனுக்கு தொடர் வெற்றியை பெற்று தந்தது. இந்நிலையில் அடுத்ததாக அசோக் செல்வன் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தை களமிறக்க இருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்த பிரியா. V இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முக்கோண காதல் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படம் நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாக இருக்கிறது.
அதன்படி இப்படம் வருகின்ற மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.