விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஷால் நடிக்கும் தற்போது ‘மகுடம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் விஷாலின் 35வது படமாகும். இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் விஷாலுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதே சமயம் படத்தில் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் ஈட்டி, ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு கருத்து வேறுபாடு காரணமாக ‘மகுடம்’ படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதிலாக தானே இந்த படத்தை இயக்குவதாகவும் விஷால் கடந்த தீபாவளி தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருந்த விஷால் ‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருப்பது எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.
🎙️ Dubbing begins for #PuratchithThalapathy #Vishal’s power-packed directorial debut #Magudam💥@VishalKOfficial 🔥 ⚓
Climax shoot 🔫 & post-production 🎬 in full swing ✨ pic.twitter.com/rVS1oltDfq— Vishal Fans Trends (@VishalTrends_) October 24, 2025

மேலும் விஷால் இயக்குனராக அறிமுகமான கையோடு ‘மகுடம்’ படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இதன் டப்பிங் பணிகளையும் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


