Homeசெய்திகள்சினிமா'அந்தகன்' படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு!

‘அந்தகன்’ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு!

-

- Advertisement -

அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.'அந்தகன்' படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு!

இந்தி மொழியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அந்தாதுன் எனும் திரைப்படம் வெளியானது. க்ரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இந்த படம் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு திரையிடப்பட்டு பெற்று கண்டது. அடுத்ததாக இந்த படமானது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து சமுத்திரக்கனி, சிம்ரன், கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியிருக்கிறார். படமானது ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. சமீபத்தில் தான் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.'அந்தகன்' படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு! அதன்படி படத்தின் டீசரும் அதைத்தொடர்ந்து அந்தகன் ஆந்தம் எனும் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான், டிமான்ட்டி காலனி, ரகு தாத்தா போன்ற பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருப்பதால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அந்தகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ