spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆண்ட்ரியா நடிக்கும் 'கா' பட ரிலீஸ் எப்போது?..... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ பட ரிலீஸ் எப்போது?….. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

ஆண்ட்ரியா திரைத்துறையில் பிரபல பாடகியாக வலம் வருகிறார். அந்த வகையில் கண்ணும் கண்ணும் நோக்கியா, ஓ பேபி ஓ பேபி, ஊ சொல்றியா மாமா போன்ற பல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதேசமயம் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, விஸ்வரூபம், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அடுத்ததாக ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா கா என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா உடன் இணைந்து சலீம் கௌஸ், மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தர் சி பாபு இந்த படத்திற்கு இசையமைக்க அறிவழகன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று அங்குள்ள விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 2022ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திரைப்படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

MUST READ