- Advertisement -
இசையமைப்பாளர் அனிருத் விரைவில் தனது உலக இசைப் பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இசை எனும் உலகில் முடிசூட மன்னராக வலம் வருகிறார் ராக்ஸ்டார் அனிருத். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் அவர் இசை அமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். விஜய், அஜித்,ரஜினி, கமல், கார்த்தி, சிவகார்த்திகேயன், என அடுத்தடுத்து கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.


எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, கத்தி, காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடி தான், தங்க மகன், ரெமோ, என ஆண்டிற்கு அவரது இசையில் கிட்டத்தட்ட 10 படங்களாவது வெளியாகிவிடும். தற்போது லோகேஷ் இயக்கத்தில் விக்ரம், மாஸ்டர், லியோ, அடுத்து தலைவர்171 படத்திற்கும் அவர் இசை அமைக்கிறார். தமிழில் உச்சம் தொட்ட ராக்ஸ்டார் அனிருத், தெலுங்கு, இந்தி என பல மொழிகளுக்கும் இசையமைக்க தொடங்கி இருக்கிறார்.



