லியோ திரைப்படம் வேற லெவலாவே இருக்கும் என்று அனிருத் தன்னிடம் தெரிவித்ததாக தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கின்றது. வெளிய படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படம் குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விஜய் திரைத்துறையில் தனது 49 வருடங்களை நிறைவு செய்ததை அடுத்து ஒரு பிரபல ஊடகம் அதற்காக சிறப்பு விழா ஒன்றை நடத்தினர். அதில் லியோ படத்தின் தயாரிப்பாளர்கள் லலித் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,
“சார் இந்த படம் எந்த லெவலுக்கு போகும் தெரியாது எந்த அளவுக்கு பிளாக்பஸ்டர் ஆகணும் மட்டும் தான் நம்ம யோசிக்கணும்” என்று அனிருத் தன்னிடம் சொன்னதாகவும் “உங்களுடைய இசை படத்தின் காட்சிகளை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும்” என்று தான் அனிருத்திடம் கூறியதாகவும் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.