நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்திருந்த கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், இறைவி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. அடுத்ததாக அஞ்சலி நடிப்பில் ஈகை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் அஞ்சலி நடிப்பில் கீதாஞ்சலி திரும்ப வந்துட்டா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படமானது தெலுங்கில் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இந்த படமானது கடந்த 2014 இல் வெளியான கீதாஞ்சலி படத்தின் தொடர்ச்சியாகும். காமெடி கலந்த ஹாரர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இதில் அஞ்சலியுடன் இணைந்து ஶ்ரீனிவாஸ் ரெட்டி, சத்யா, ரவிசங்கர், பிரம்மாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
சிவ துரளபதி இந்த படத்தை இயக்கியுள்ளார் . எம் வி வி சினிமாஸ் மற்றும் கோனா பிலிம்ஸ் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரவீன் லக்கராஜு படத்திற்கு இசையமைத்துள்ளார். சுஜாதா சித்தார்த்தா இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படமானது தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
- Advertisement -