ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து ரஜினி, ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. அதே சமயம் தற்போது ரஜினி, கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகிறது. கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் ரஜினி நெகட்டிவ் ஷேட் ரோலில் நடிக்கிறார் எனவும் இரண்டு விதமான லுக்கில் நடிக்கிறார் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் நேற்று (ஜூன் 5-ம் தேதி) கூலி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கியதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்ததாக இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து நடிகை ரெபா மோனிகா ஜான், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -