Homeசெய்திகள்சினிமாஇதற்கு ஒரு முடிவே இல்லையா?... மீண்டும் வைரலாகும் அலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ... இதற்கு ஒரு முடிவே இல்லையா?… மீண்டும் வைரலாகும் அலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ…
- Advertisement -
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உண்மையில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண். இவருடைய வீடியோவை ராஷ்மிகா மந்தனா போல டீப் பேக் முறையில் மாற்றி சமுக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமன்றி பாடகி சின்மயி உள்பட கோலிவுட் நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், டெல்லி போலீசாரும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக 4-க்கும் மேற்பட்டவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும், இது போல செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பிரபல பாலிவுட் நடிகை ஆலிபா பட்டும் பாதிக்கப்பட்டுள்ளார். ராஷ்மிகா மற்றும் கஜோலைத் தொடர்ந்து ஆலியா பட்டின் புகைப்படத்தையும் சித்தரித்து அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மர்ம கும்பல். இதற்கு ஒரு முடிவே வராதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.