spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குறது..... மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!

ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குறது….. மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!

-

- Advertisement -

திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம்

நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் திரிஷா குறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் கேவலமாக பேசியிருந்தார். இதற்கு த்ரிஷா, ரோஜா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மன்சூர் அலிகான், ” என் படம் வெளியாகும் சமயத்தில் ஏதோ அரசியல் உள்நோக்கத்தில் திரிஷாவிடம் எடிட் செய்து காட்டி இருக்கின்றனர். சில சொம்பு தூக்கிகளோட பரப்பலாம் என்கிட்ட வேகாது. உலகத்துல எத்தனையோ பிரச்சனை இருக்கு… போய் பொழப்ப பாருங்க” என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்கறது..... மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!

we-r-hiring

எனவே தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பூ, மன்சூர் அலிகான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்ததன்படி தேசிய மகளிர் ஆணையம் சட்டப்பிரிவு 509 பி, மேலும் இது தொடர்புடைய மற்ற பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளது.ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்கறது..... மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!

அதே சமயம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கமும் மன்சூர் அலிகானின் அநாகரிகமான பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேச்சு எமது சங்கத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக்கு குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

MUST READ