அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் பட டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், லாக் டவுன் எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ஜீவா இதனை இயக்கியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு நபர் அனுபவிக்கும் துயரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அனுபமா உடன் இணைந்து சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட், இந்துமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். என்.ஆர். ரகுநந்தனும், சித்தார்த் விபினும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் கடந்த ஆண்டிலேயே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போன இந்த படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் நாளை (நவம்பர் 27) காலை 11 மணி அளவில் வெளியாகும் எனவும் இந்த டிரைலரை விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் இணைந்து வெளியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


