அனுஷ்கா – விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகை அனுஷ்கா. அந்த வகையில் இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதே சமயம் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இருப்பினும் உடல் எடை அதிகரித்துவிட்ட காரணத்தால் அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
அதே சமயம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி எனும் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் அனுஷ்கா. அடுத்தது இவர் காட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகியுள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை க்ரிஷ் ஜகர்லாமுடி இயக்க யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
நாகவெல்லி வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மனோஜ் ரெட்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2025 ஜூலை 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -